Bible Quiz (வேத வினா விடை – Tamil) – ELS
- வேத வினா-விடை எனும் இப்புத்தகம் தனி மனிதரின் வேத
அறிவைப் பெருக்குவதற்கு ஒரு சிறந்த நூலாகும். சிறுவர்
களுக்கென தொழில்கள், பறவைகள், தைரியசாலிகள். நண்பர்
கள், வீட்டின் பாகங்கள், உணவுப்பொருள்கள், வண்ணங்கள்,
இசைக் கருவிகள் ஆகிய இதுபோன்ற பல தலைப்புகளின் கீழ்
கேள்விகளும், பெரியவர்களுக்கென பல்கூறுகளடங்கிய
வினாக்களும், சில மணித்துளிகள் செலவிட்டு சிந்தித்துக் கூறக் கூடிய பதில்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. - சிறுவர்கள் வேதாகம அறிவில் வளர்ச்சியடைய குடும்பங்
களிலும், ஞாயிறு பள்ளி அல்லது விடுமுறை வேதாகமப்
பள்ளிகளிலும், பெரியவர்கள் தங்கள் திருச்சபைக் கூடுகை
களிலும் இந்நூலைப் பயன்படுத்தலாம். வினா கேட்பவர்,
விடைத்தாள்களைத் திருத்துபவர் வசதிக்கென்று இந்நூலின்
கடைசி பக்கங்களில் விடைகள் வேத வசனக் குறிப்புகளுடன்
கொடுக்கப்பட்டுள்ளது. - வினா-விடைகளின் வழியே பரிசுத்த வேதாகமத்திலுள்ள
பல நிகழ்வுகளை நம் மனதில் பதிய வைப்பதற்கு இந்நூல்
பெரிதும் துணை புரியும்.
Reviews
There are no reviews yet.