Case For Christ: by- Lee Strobel
கிறிஸ்துவை நிரூபிக்கும் சான்றுகள்
-லீ ஸ்ட்ரோபெல்
(தமிழாக்கம்: முனைவர் ஜெயக்குமாரி)
அனுபவமிக்க பத்திரிகையாளர் தேடிக் கண்டுபிடிக்கும் வரலாற்றின் மிகப் பெரிய நெடுங்கதை
நாசரேத்துவின் இயேசு மெய்யாகவே தேவனுடைய குமாரனா என்பதற்கு நம்பகத்தன்மை கொண்ட சாட்சிகள் இருக்கிறதா?
சிகாகோ டிரிப்யூன் பத்திரிகையின் முன்னாள் சட்ட பதிப்பாளராக இருந்த லீ ஸ்ட்ரோபெல் நாத்திகத்திலிருந்து விசுவாசத்தைப் பற்றிக் கொள்ள பயணித்த பாதையை மீண்டும் புலனாய்வு செய்யும்படியாக வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி, கையெழுத்துப் பிரதிகள் ஆகிய களங்களில் திறமை வாய்ந்த அறிஞர்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட பன்னிரண்டிற்கும் மேற்பட்ட நிபுணர்களை குறுக்கு விசாரணை செய்கிறார்.
ஸ்ட்ரோபெல் சவாலான கேள்விகளை அவர்களிடத்தில் தொடுக்கிறார். புதிய ஏற்பாடு எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை கொண்டது என்பதற்கு வேதபுத்தகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரங்கள் உண்டா? உயிர்த்தெழுதல் உண்மையான நிகழ்வு என்று நம்புவதற்கு காரணம் உண்டா?
ஸ்ட்ரோபெலின் கடுமையான, நேரடியான கேள்விகள் இந்த சிறப்பு விற்பனை புத்தகத்திற்கு கற்பனைக்
கதையின் கவர்ச்சியையும் விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறது. ஆனாலும் இது கற்பனைக் கதை அல்ல. இது வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒருவரைப் பற்றிய உண்மையை உறுதியுடன் தேடுதல்.
இந்தப் புதிய பதிப்பு, பல திருத்தங்கள், சேர்த்தல், இதோடு தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் கையெழுத்துப்
பிரதிகளின் கண்டுபிடிப்புகள், மேற்கொண்டு புலனாய்வு செய்ய புதிய சிபாரிசுகள் இந்த புத்தகத்தின் தாக்கத்தைக் குறித்து வியத்தகு கதைகளைச் சொல்லும் எழுத்தாளர்களின் நேர்காணல், காட்சிகளின் பின்னணித் தகவல்கள், மற்றும் நம்பிக்கையற்றவர்களின் விமர்சனங்களுக்குக் கொடுக்கப்படும் மறுமொழி இவைகளையெல்லாம் உள்ளடக்கியது. கிறிஸ்துவை நிரூபிக்கும் சான்றுகளும் அதன் உப ஆதாரங்களும் அச்சுப்பதிப்பில் ஒரு கோடி பிரதிகளை எட்டிக்கொண்டிருக்கும்போது, பல தகவல்களுடன் விரிவாக்கம் செய்ய்யப்பட்ட இந்தப் பதிப்பு இன்றைய வாசகர்களுக்கு ஒரு விலை மதிப்பில்லாத புத்தகம்.
Reviews
There are no reviews yet.