Deities in The Bible-Tamil
(திருமறையில் பிற தெய்வங்கள்)
by- Jesudasan Jayaraj
கிறிஸ்தவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வமாகிய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்திருந்தால் மட்டும் போதாது, அவர்கள் பயன்படுத்தும் திருமறையில் கூறப்பட்டுள்ள பிற தெய்வங்களைக் (Deities) குறித்தும் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டுமென்பதுதான் இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.
பல்சமயச் சூழலில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களும், ஆதிக்
கிறிஸ்தவர்களும் மற்ற தெய்வங்களை எந்த அளவுக்கு
அறிந்துகொண்டு தங்கள் சமய நம்பிக்கைகளை எவ்விதம் வளர்த்துக்
கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால்,
திருமறையில் காணப்படும் பிற தெய்வங்களுடைய பெயர்களின்
அர்த்தம், தன்மைகள், வழிபாட்டு முறைமைகளை நாமும் தெரிந்து
கொள்வது நல்லது; அதற்கு இந்நூல் பேருதவியாக இருக்கும்.
அன்று அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுதல் கூடாதென்று
இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு, இன்று நமக்கும்
ஒரு எச்சரிப்பாக உள்ளதை இந்நூலின் மூலம் நாம் உணரலாம். இந்நூலை நாம் கருத்துடன் வாசிக்கும்போது, கிறிஸ்து இயேசுவின் நற்செய்திப் பணிகள், சிலுவையில் அவர் உருவாக்கின மன்னிப்பு, உலக மீட்பு மற்றும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஆகியவற்றின் மீது நமது விசுவாசம் மேலும் அதிகரிக்கும்.
ELS வெளியீடு
(pages:84)
Reviews
There are no reviews yet.