Forgiveness: A Foretaste Of Heaven (Tamil- மன்னித்தல் பரலோகத்தின் ஒரு முன்சுவை)
நீங்கள் பரலோகத்தைப் பூலோகத்திலேயே ருசிபார்க்க விரும்புகிறீர்களா? உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், குடும்பத்திலும், இல்லற வாழ்விலும், சமுதாயத்திலும் பரலோகத்தைச் சுவைத்தறிய வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு உண்டா?
கிறிஸ்து மன்னித்தது போல நீங்கள் பிறரை மன்னிக்கத் துவங்குங்கள்! நீங்கள் ஜெபத்துடனும் உத்தம உள்ளத்துடனும்
இந்நூலை வாசிப்பீர்களாயின், அது உங்களுக்கு மிகுந்த நன்மை
பயக்கும் என்பது நிச்சயம். நீங்கள் கிறிஸ்து மன்னித்தது போல
மன்னிக்கக் கற்றுக்கொண்டால், எந்த மனிதனோ, பிசாசோ
உங்களுக்கு எத்தீமையும் செய்ய முடியாது! அவர்கள் ஒருவேளை
உங்களுக்குத் தீங்கிழைக்க முயற்சித்தாலும், தேவன் அதை
நன்மையாகத் திருப்பிவிடுவார்! இந்நூலை நீங்கள் வாசிப்பதுடன்,
பிறரை மன்னிக்கச் சிரமப்படுகிற மற்றவர்களுடனும் தயவுசெய்து
இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Reviews
There are no reviews yet.