Theerkkan தீர்க்கன் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன ஆகமங்கள் ஓர் அறிமுகம் : by- R. Madhan Raj (ELS)
தீர்க்கதரிசனம் என்பது தெய்வீக மொழி. தேவன் மனிதனோடு பேசிய வார்த்தைகள். இணைவதற்கு சாத்தியமில்லாத இரண்டு துருவங்கள் இணைந்ததற்கான அடையாளம். தேவனை ஆவி உலகத்தினின்று மனிதன் வாழும் மாம்ச உலகத்தோடு உறவுகொள்ள வைத்த இணைப்புப் பாலம்.
அந்த தீர்க்கதரிசனங்களின் தொகுப்பே தீர்க்கதரிசன ஆகமங்கள். வேதத்தில் தீர்க்கதரிசன ஆகமங்களே பெரும்பான்மை. தீர்க்கதரிசன ஆகமங்கள் இன்று கிறிஸ்தவர்களால் அதிகம் தவிர்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அதின் மொழிநடை. தீர்க்கதரிசன செய்தியின் மொழிநடை வாசிப்பை தூண்டக்கூடிய சுவாரஸ்யத்தைக் குறைப்பதாக தோன்றலாம். ஆனால் தேவனையும், பழைய ஏற்பாட்டின் மையக்கருத்தையும் தீர்க்கதரிசன ஆகமங்களின் துணையில்லாமல் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய இருதயத்தை மக்களுக்கு விளங்கச் செய்வதற்கு தங்கள் அங்கீகாரத்தையும், மகிழ்ச்சியையும் முற்றிலும் இழக்கும் அளவிற்கு
அர்ப்பணிப்பில் உச்சம் கண்டவர்கள்.
தீர்க்கதரிசிகளின் இந்த பிரம்மாண்ட அர்ப்பணிப்பையும், அவர்கள் அறிமுகப்படுத்திய தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியத்தையும் விளங்கச்செய்வதின்மூலம் தீர்க்கதரிசன ஆகமங்களின் நிஜமான செய்தியை அடையாளப்படுத்துவதே இப்புத்தகத்தின் தலையாய
நோக்கம். இந்த புத்தகம் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன ஆகமங்களைக் குறித்த தவறான எண்ணங்களை மாற்றி, சத்தியத்தை அறிகிற அறிவில் தேறுவதற்கு அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கும்.
Pr. L.M. Francis Raj –
மிக உன்னதமான படைப்பு..
எளிமையாகவும் அதே சமயத்தில் மிக ஆழமாகவும் பல விளக்கங்கள் உள்ளன.
ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடமும் நிச்சயமாக இருக்க வேண்டிய ஒரு புத்தகம்.